இந்த தினத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்ததென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. நினைவு தெரிந்த நாள் தொட்டே ஒரு கார் வாங்க வேண்டுமென்பது என் வாழ்வின் குறிக்கோள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. சின்ன வயசில் அம்மா எதாவது வாங்கிவரக் கடைக்கு அனுப்பினால், அந்தப் பயணம், என் மானசீகக் காருடன்தான். காற்றிலேயே கியர் மாற்றி, ஸ்டியரிங் திருப்பி, ஹாரன் அடித்து, அமர்க்களம் பண்ணிய எனக்கு அச்சாரமாய் அமைந்தது Boost-க்கு இலவசமாய் வந்த ரேசிங் கார். அது எங்கள் வீட்டில் பயணிக்காத இடமே இல்லை. ஹாலின் சுற்றளவை ஒரு முறை வலம் வந்த பின் "ராஜாவுக்கு ராஜா நான்டா" பாட்டில் வரும் ரஜினி மாதிரி சுவற்றில் ஏறியும் பயணித்திருக்கிறேன். வ்ரூம்… வ்ரூம்…. என்று டிஜிட்டல் சவுண்ட் எஃபெக்டுடன் நான் கிளம்பினாலே அடுக்களையிலிருந்து அம்மாவின் குரல் கேட்கும்.
"செத்த சும்மா இரேண்டா.. காலைலேர்ந்து ஒரே தலைவலி"
எங்கள் வீட்டுக்குள் ஒரு குட்டி ரயில்வேயே நடத்தத் தொடங்கினேன். என் கார் கிராஸ் பண்ணும் போது, யார் குறுக்கே வந்தாலும் என் கார் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக என் கார் என்றுமே நேர் சாலையில் சென்றதில்லை. கொண்டை ஊசி வளைவுகள் என்றால் கொள்ளைப் பிரியம்.
என் தொல்லை தாங்கமுடியாமல் அம்மாவும், அக்காவும் செய்த கூட்டுச்சதியின் பயனாக, ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்து பார்த்த போது, கார் மாயமாய் மறைந்து விட்டது. நான் இரண்டு நாள் அழுத பின் அந்த அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஆனால் கார் வாங்கும் ஆசை மட்டும் Hutch விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி மாதிரி தொடர்ந்து கொண்டே இருந்தது. அதன்பின் தொடர்ந்த வருடங்களில் நான் பள்ளி, கல்லூரியை முடித்து இன்று ஒரு கம்பெனியில் கைநிறையச் சம்பளத்தில்.
ஒரு நாள் இரவு வேலையிலிருந்து திரும்பி வரும் போதுதான் என் கண்ணைக்கவர்ந்தது, ரோட்டின் குறுக்கே பிரம்மாண்டமாய் வீற்றிருந்த அந்த விளம்பரப்பலகை. என் போன்ற கார்க் காதலர்களின் கவனத்தைக் கவர்வதற்கென்றே ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது பளபளப்பான ஒரு குட்டிக் கார். அருகிலேயே 'கார் லோன்? இட்ஸ் வெரி சிம்பிள் ' என்று போட்டு ஒரு வங்கியின் பெயர் போட்டிருந்தது.
மறுநாளே நான் அந்த வங்கியில். "லோன் அப்ளை பண்ணுபவருக்குக் கண்டிப்பாக 'டிரைவிங்' தெரிந்திருக்க வேண்டும்" என்று ஒரே வரியில் முட்டுக்கட்டை போட்டார் மேனேஜர். திரும்பிவரும் போதே என் மனம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அதன்பின்
ஒருவாரம் டிரைவிங் ஸ்கூல் தேடும் படலத்தின் முடிவில் ஒரு டிரைவிங் ஸ்கூலைக் கண்டுபிடித்துச் சென்றேன். அது ஒரு சிறிய காம்ப்ளக்ஸ். பெட்டி பெட்டியாக ஆறு கடைகள். கீழே மூன்று மேலே மூன்று. ஒரு டீக்கடைக்கும், ஒரு லாரி புக்கிங் ஆபீசுக்கும் இடையில், இரண்டடி அகலத்தில் ஏறக்குறைய 80-டிகிரி சாய்வில் இருந்த ஒரு படிக்கட்டில் ஏறிச்சென்றால், ஒரு திருப்பத்தில், சுற்றிலும் வெற்றிலை பாக்குக் கறைகளுக்கு மத்தியில் டிரைவிங் ஸ்கூல் பெயர் போட்டு அம்புக்குறி போட்டிருந்தது.
மிஞ்சிப்போனால் 8-க்கு 8-சதுரடியில் ஒரு அறை. சுவர் முழுவதும் பெட்டி பெட்டியாகப் போட்டு சாலை விதிமுறைகளுக்கான குறியீடுகளை வரைந்து வைத்திருந்தனர். எப்படியும் வரைந்து
பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். ஒரு மூலையில் பலவகையான ஆட்டோமொபைல்
குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு மின்விசிறி சீரான சுதியில் பாடிக்கொண்டிருந்தது. கீழே ஒரே ஒரு டேபிள். அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி ஒருவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். என்னைத் தலையைத் தூக்கிப்பார்த்தவர், ஏதோ கல்யாண வீட்டுக்கு வரவேற்பவர் போல, "வாங்க, வாங்க! இங்க உட்காருங்க"
கொஞ்சம் கூட மாறாமல், 'காபியா டீயா?' என்கிற தொனியில்,
"என்ன? டூ வீலரா, ஃபோர் வீலரா?" என்றார்.
ஆள் பார்ப்பதற்கு, வீரமணிதாசன் மாதிரி வெள்ளைத் தாடி, உத்திராட்சக் கொட்டை, 2-இன்ச் அகலத்தில் சந்தனப்பட்டை என பக்திப்பழமாக காட்சி தந்தார். "ரெண்டுமேதான் "
"ஓட்டத் தெரியுமா? இல்ல கத்துக்கணுமா?"
"கத்துகிட்டு லைசென்ஸ் எடுக்கணும்"
"ஓகே! ஓகே! அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஈஸியா எடுத்துறலாம். ரெண்டும் சேத்துன்னா 2600 ரூபா ஆகும். உங்களுக்கு 2500 ரூபா போட்டுக்கறேன். ஓகே-ன்னா நாளைக்கே LLR போட்டுறலாம். வரும் போது 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டா, அப்புறம் உங்க ரேஷன் கார்டை மட்டும் எடுத்துட்டு வந்துருங்க. மத்தத நான் பாத்துக்கறேன். அடுத்த மாசமே லைசென்ஸ் எடுத்துறலாம்"
வேறு சில சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப்பின் வீடு திரும்பினேன்.
மறுநாள் காலை அரை நாள் விடுப்புக் கேட்டு சூப்பிரெண்டுக்கு லெட்டர் அனுப்பிய பின் புறப்பட்டேன். "நீங்க நேரா RTO ஆபீஸ் வந்துருங்க. நான் உங்கள அங்க பாக்கறேன்" அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட விதவிதமான வாகனங்கள்
புடை சூழ, ஒரு ஓரமாக வீற்றிருந்தது அந்த அலுவலகம். அலுவலர்கள் யாரும் இன்னும் வரவில்லை.
என்னைப் போல் இன்னும் சிலர்திட்டுத் திட்டாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். உங்கள் சேவையில் போக்குவரத்துத் துறை, உங்கள் வசதிக்காக 9 மணி முதலே இயங்கும் என்ற அறிவிப்புப்பலகை பளபளத்தது. அனிச்சையாய் மணி பார்த்தேன். எனக்கு அருகில் 'LLR-க்கு பணம் எங்க கட்டணும்?' என்று ஒரு அப்பாவி விசாரித்துக் கொண்டிருந்தார்.
விளம்பரங்களில் வரும் வாட்ச் மாதிர் 10.10 மணிக்கு, ஒருத்தர் வந்து நாற்காலி போட்டு அமர்ந்தார். அருகில் ஒரு பெரிய ரெஜிஸ்டர், கூடவே ஒரு எடுபிடி. அதற்குள் அந்த டிரைவிங் ஸ்கூல் வீரமணிதாசன் வந்து, "சார், நீங்க கையெழுத்துப் போட்டுட்டு, உள்ள இருக்க க்யூல வந்து நில்லுங்க. நான் உள்ளதான் இருப்பேன்" என்றபடி நகர்ந்தார். அவர் சொல்லாத மற்றொரு விசயம், இங்கே ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போடவே ஒரு க்யூ காத்துக்கொண்டிருந்தது. அதன் கடைசியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
இந்தக் கையெழுத்து எதற்கு என்று கேட்கக்கூட முடியாமல், அப்படி ஒரு அவசரம், அனைவரிடமும். மொய் எழுதுவது மாதிரி ஒவ்வொருவராகக் கையெழுத்துப் போட, அந்த எடுபிடி "ஆங்.. அம்பது ரூவா எடுப்பா" என்று அதட்டிக்கொண்டிருந்தான். என் முறை வந்தபோது,
ஒவ்வொரு 'காலமா'கப் பார்த்தேன். வழக்கம் போல் வரிசை எண், பெயரைத் தொடர்ந்து தேர்வுதொடங்கிய நேரம் என்று போட்டு 9.10 என்று நிரப்பப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு கையெழுத்திட்டபின் அடுத்த 'காலம்' பார்த்தேன். தேர்வு முடிந்த நேரம் என்று போட்டு 9.30 என்று போட்டிருந்தது. இந்நேரத்திற்குள் எனக்குப் பின் தள்ளு முள்ளு தொடங்கி விட்டது.
"யோவ், சீக்கிரம் நவுருய்யா, அவனவன் ஜோலியப் பாத்துகிட்டு போவ வேணா?" அவசரமாய் மற்றொரு கையெழுத்திட்டபின் நகர்ந்தேன்.
தாசன் உள்ளே காத்திருந்தார்.
"என்ன சார், நான் ஏதோ பரீட்சை எழுதுனேன்னு கையெழுத்து வாங்குறாங்க. நான் கேள்வித்தாளக் கூட பாக்கலையே சார்" பரிதாபமாய் கேட்டேன்.
"இதான் அது! சீக்கிரமா இதுலயும் ஒரு கையெழுத்து போடுங்க"
இந்த வினோதமான பரீட்சையில் அப்படி என்னதான் கேட்டிருக்கிறார்கள் என்ற ஆவலில் அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தேன். நோட்டு பேப்பர் சைஸில் ஒரு சிறிய பேப்பரில் ஒரே ஒரு அட்டவணை மட்டும் போட்டு, வினா எண் என்று போட்டு 1 முதல் 12 வரை அச்சிட்டிருந்துது. அதற்கு இணையாக விடைகள் என்று போட்டு அ, இ, ஆ என்று மாற்றி மாற்றி நிரப்பியிருந்தனர்.
மதியம் ஆபீஸ் போனதும் ராம்-இடம், நான் எழுதிய இந்த எக்ஸாம் பத்தி சொல்லணும். அவனுக்கு எக்ஸாம்-னாலே பயங்கர அலர்ஜி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். என் கையில் ஒரு விண்ணப்பத்தைத் திணித்து விட்டு, "இதே க்யூல வாங்க. அந்தக் கடைசியில் சிகப்புச்சட்டை போட்டவர்கிட்ட இதையும் உங்க ரேசன் கார்டயும் குடுத்திங்கன்னா அவ்ளோதான்".
பையில் கைவிட்டால் போட்டோ மட்டுமே வந்தது. என் விதியை நொந்து கொண்டே அடுத்த Zip-ஐ திறந்தேன். நேற்றிரவு ரேசன் கார்டை எடுத்து கப் போர்டில் வைத்தது நினைவுக்கு வந்தது.
"சார்! ரேஷன் கார்டை மறந்துட்டேன் சார். இப்போ என்ன பண்றது".
"சரி! சரி! விடுங்க பாத்துக்கலாம்" என்றபடி அடுத்தவரைக் காப்பாற்ற நகர்ந்தார்.
என் முறையும் வந்தது. கொஞ்சம் பெரிய சைஸ் ரோட் சிக்னல் மாதிரி சிகப்பு நிறத்தில் பயமுறுத்தினார் அந்த இன்ஸ்பெக்டர்.
என் விண்ணப்பத்தைப் புரட்டிப் பார்த்தவர், "அட்ரெஸ் ப்ரூஃப்?"
முடிந்த அளவு சோகமான ஒரு முகத்தை வைத்துக்கொண்டு,
"Sir, actually I forgot my ration card. I am working in"
"என்னா? மறந்துட்டீங்களா? அது இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. டிரைவிங் லைசென்ஸ்னா சும்மான்னு நெனச்சிங்களா" எனத்தொடங்கி ஒரு சிற்றுரையே நிகழ்த்திவிட்டார்.
எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு உணர்வு. நிமிர்ந்து பார்க்கக் கூட கூச்சமாய் இருந்தது. அதற்குள் எங்கிருந்தோ ஆபத்தாண்டவராக ஓடி வந்த தாசன் "சார்! சார்! அது நம்ம ஸ்கூல் பையன் சார்"
"சரி! சரி! அட்ரஸ் ப்ரூஃப் இல்ல, இதுல இருக்கிற அட்ரஸ அடிச்சுட்டு டிரைவிங் ஸ்கூல் அட்ரஸ எழுதிட்டு வாங்க. லைசென்ஸ் அந்த அட்ரெஸ் போட்டுதான் வரும். ஓகேவா?" என்றபடி நீட்டினார்.நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, தாசன் அவசரமாகத் தலையாட்டிவிட்டு விண்ணப்பத்துடன் என்னையும் வாங்கிக் கொண்டு நகர்ந்தார். "சார், நான் போய் ரேசன் கார்ட எடுத்துட்டு இன்னோரு நாள் வர்றேன் சார்"
"அட நீங்க ஒண்னு! உங்களுக்கு என்ன அட்ரஸ் வேணும்னு ஒரு பேப்பர்ல எழுதிக் குடுங்க! அது போதும். நாளைலேர்ந்து டிரைவிங் கிளாஸ் வந்திடுங்க".
ராம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக"ம்.. இது என்னடா..? பாஸ்போர்ட் ஆபீஸ் போய்ப் பாரு! நூறு ரூபா குடுத்தா உன்ன க்யூல முன்னாடி கொண்டு போய் நிக்க வைக்கக் கூட ஆள் இருக்கு"
"எப்படிடா?" ஆச்சரியம் விலகாமல் கேட்டேன்.
"அப்படித்தான். "எதுவுமே இந்தியாவுல முடியும்டா!" என்னைப் பார்த்து கண்ணடித்தான்.
என்னுடைய டிரைவிங் கிளாஸ் தொடங்கியது. 2, 3, 4-வது கியரெல்லாம் ஒழுங்காக வந்துவிட பர்ஸ்ட் கியர் போட்டு ஸ்டார்ட் செய்வது மட்டும் 20 கிளாஸுக்கு அப்புறமும் அடம் பிடித்தது.
டெஸ்ட் நாளும் வந்தது. எவ்வளவோ முயன்றும் நான் பயந்த மாதிரியே ஓட்டும் போது வண்டி ஆஃப் ஆகி விட்டது. டெஸ்ட் முடித்து அருகிலேயே காத்திருந்தேன். அரைமணி நேரம் கழித்து என்னிடம்
ஓடி வந்தார் தாசன். கூடவே அசலா! போலியா! என்று கூறமுடியாத மூச்சிறைப்பும்.
"சார்! சார்! உங்கள பெயில் பண்ணிடவான்னு கேக்குறாரு இன்ஸ்பெக்டரு. பெயிலானா 200 ரூபா கட்டி அடுத்த வாரம் திரும்பவும் வரணும் சார்"
இதற்குள் அந்த அலுவலகத்தின் நடைமுறைகள் எனக்கு ஓரளவு அத்துப்படியாகிவிட்டன. "இப்ப நான் என்ன பண்ணணும்-னு சொல்லுங்க"
"இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தான். வேணுன்னா இன்னைக்கே முடிச்சிடலாம். ஆனா! ஒரு நூத்தம்பது ரூபா கூட செலவாகும்"
சிறிது நேரத்திற்குப் பின் என்னை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று போட்டோ எடுத்தனர். பின் ஒரு பிரிண்ட் அவுட்டில் கையெழுத்திட்டேன். "சாய்ங்காலம் நம்ம ஸ்கூலுக்கு வந்து லைசென்ஸ்
.
வாங்கிக்கலாம் சார்" புன்னகை மாறாமல் வழியனுப்பினார்.
மாலை டிரைவிங் ஸ்கூல் சென்று என் லைசென்ஸை வாங்கி ஆச்சரியத்துடன் பார்த்தேன். என் வீட்டு முகவரி, வரி வரியாக அச்சிடப்பட்டிருந்தது.
"எது வேணா பண்ணலாம் சார்" தாசன் பல்லைக்காட்டினார்.
"எதுவுமே இந்தியாவுல முடியும்டா!" ராம் சொன்னது நினைவுக்கு வந்தது.
தெருவில் இறங்கி நடந்தேன். டீக்கடை டீவியில் ஒரு செல்போன் விளம்பரம் கேட்பாரற்று அலறிக் கொண்டிருந்தது.
"விழித்திடு இந்தியா! விழித்திடு"
Monday, December 17, 2007
Sunday, December 16, 2007
மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்
இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாகை, வீட்டில் வேலையாட்கள் என அவன் உலகம் விரிந்து விட்டது. சிறகு எனப் பொன்னாடை போர்த்தி அலைகிற மனிதன்.
குளத்து ஐயருக்கு பிள்ளையையிட்டு எப்பவுமே மயக்கம் சார்ந்த பெருமை உண்டு.
பார்த்து எத்தனை நாளாச்சி. அவனும் வரக் கூடாது என்றில்லை. வருகிறதைப் பற்றி நினைக்கவே நேரமில்லை அவனுக்கு. அவளாவது! அவன் மனைவியாவது அவனை ஊக்கி வெளியிடம் நாலு இடம் போக வர என்றிருக்கலாம். அவள் டாக்டர். நகரத்தில் அவளை நம்பி ஆயிரம் ஜனங்கள். தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் மாற்றினாற் போல, பாதிப் பேச்சிலேயே அவளுக்கு அழைப்பு வந்து விடும். அந்தப் பொழுதின் முகமே மாறிப்போகும். வேலை அப்படி. அது வேறுலகம் அல்லவா?
தனிமைச் சிறு கணங்கள் என்னுடையவை. உலகின் ஒரு பகுதி என தன்னைப் பாராட்டாமல் வாழ்கிற கணங்கள். அவன் வேறு மாதிரி. தன் முனைப்பானவன் - புறப்பட்ட அம்பு. அனுபவங்கள் சிக்காது. தேடிப் போக வேண்டும். கணவனும் மனைவியும் பேசும்போதே திடீரென்று தங்களை அறியாமல் பேச்சு ஆங்கில பாஷையில் மாறிப் போகிறது. அவருக்குப் புரியும் என்றாலும் பேச இந்த வேகம் கிடையாது அவரிடம். அவர்கள் அவருடன் ஆங்கிலத்தில் பேச அவர் தமிழில் பதில் சொல்கிற கணங்கள் அநேகம்!
மடப்பள்ளியில் சிறு வெண்கலப்பானைச் சாதம். பிரசாதம் என சந்நிதியில் பிரசாதம் காட்டி எடுத்துக் கொண்டு வருவார். சாம்பார் அல்லது ரசம் அல்லது கொத்துமல்லிச் சட்னி, தேங்காய்த் துவையல் ஏதோ ஒன்று சேர்த்துக் கொள்ள அவர் வயிற்றுப்பாடு தீர்ந்தது. கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் வதக்கல் அல்லது அப்பளம் பொறித்தால் கூடத் தொட்டுக் கொண்டு சாப்பிடத் தாராளம் அல்லவா?
மனைவி இல்லாத கணங்களைப் பிரச்சனையாக உணராமல், மனம் அடுத்த சுற்றுக்குப் பழகிக் கொண்டது. கோவில் கைங்கர்யம் பரம்பரை பாத்யதை என்றாச்சி. வம்சாவளியாய் ஊரும் ஊர்மண்ணும் இரத்தத்தில் இருக்கிறது. மண்தாண்டி எல்லை கடக்க மனம் வரமாட்டேனென்கிறது.
''இதெல்லாம் நம்ம பிரமைப்பா'' என்கிறான் நீலு.
''உலகமே பிரம்மாண்டமான பிரமைதாண்டா'' என்று குளத்து பதில் சொல்லிச் சிரிக்கிறார்.
''நாம வாழறதா நினைச்சிக்கறதே ஒரு பாவனைதான்றேன்! நம்மால என்ன முடியுஞ் சொல்லு. அவன் ஆட்டுவிக்கிறான். நாம வெறும் பொம்மை''.
''இன்னும் எத்தனை தலைமுறைக்குச் சபரிமலை இருமுடி போல இப்படித் தூக்கி வெச்சிண்டு திரியப் போறீங்களோ தெரியல'' என்று சிரித்தான் நீலு. அவருக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது அவன் ஃபோர்த் ஃபார்ம், ஒன்பதாங் கிளாஸ். தனது மூளையைப் பொக்கிஷ அறையாய் அவன் சட்டெனப் பிடித்துக் கொண்டதும், அதில் விளைச்சல் எடுத்த, அறுவடைகண்டு தானியங்களை அவருக்குப் படையல் செய்ததுமான கணங்கள். ''கடவுள் இல்லை'' - என்பது அவன் நம்பிக்கை. அவன் வாதம். அந்த-வயதின் வாதம் அது அல்லவா?
அந்தந்த வயதுக்கேற்ற எடுப்புகள் வேண்டிதான் இருக்கிறது. சிறு பாலகனாய் அவர் கைப்பிடித்துக் கூட வந்தவன். ''அப்பா தூக்கிக்கோ'' என்று அழுதவன்தான். இப்போது ரொம்ப தூரம் அவன்கூட அவர் நடந்து வருகையில் அவரைக் கேட்டான் அவன் ''கால் வலிக்கிறதாப்பா?''... அவர் புன்னகைத்துக் கொள்கிறார்.
''அவன் இருக்க முடியாது. ஆதியில் உலகில் என்ன இருந்தது. எதுவுமேயில்லை''
''ஆமாம், எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக' ' என்று புன்னகைத்தார் குருக்கள்.
''இந்தியா ஆன்மிக நாடப்பா'' என்றார் மகனைப் பார்த்து. ''இவர்கள் மத நம்பிக்கை மிகப் பெரிய அளவில் கொண்டவர்கள். அதன் சிந்தனையில் திளைத்தவர்கள். ஆகவேதான் அவர்கள் பூஜ்யத்தைக் கண்டு பிடித்தார்கள். வேறு யாராலும் பூஜ்யம் என்ற எண்ணைக் கண்டு பிடித்திருக்கவே முடியாதுதான். விளங்குகிறதா நீலு? பூஜ்யம் எத்தனை புதிர்களைக் கிடுகிடுவென்று முடிச்சு-அவிழ்த்து எறிந்தது இல்லையா? இன்றைய கம்ப்யூட்டர் வரை பூஜ்யம் அற்புதமாய்க் கூட உதவிக்கொண்டே வரவில்லையா நீலு?''
அவருக்கே ஆச்சரியம் தான் இவ்வளவு பேசியது - எல்லாம் கடவுள் சித்தம் போலும்.
''அப்படியானால் நமது இப்பிறப்பின் அர்த்தம் ஊடுபொருள் - சரி... தாத்பர்யம் என்ன?''
''தெரியாது! சந்ததிகளைக் கடந்து மானுடம் மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறது. இயற்கையை சுவீகரித்துக் கொண்டு தன் அறிவுப்பரப்பை விஸ்தரித்துக் கொண்டு செல்கிறது அல்லவா?''
''ம் - ஓர் எல்லையில் மார்க்சியமும் மதமும் சந்திக்கவே செய்யும். அது முரண் அல்ல'' என்றான் நீலு சர்வ அலட்சியமாய்.
அவர் திகைத்தார். அப்படியா? முரண்களால் அதனிடை ஒற்றுமை. சாத்தியமா இது?
கடவுளை அலட்சிக்கிற ஒவ்வொருவனிடமும் கடவுள் இருக்கிறார்.
அவன் சுயபலனை எதிர்பாராதவன் அல்லவா? அம்மட்டில் பிறரை எதிர்பாராத நேயக்காரன் அல்லவா?
''உலகின் பெரும் புதிரை நோக்கி நாம் நகர்கிறோம் என்று உனக்குப் படாதது வியப்புதான்''
''சரி, அதை வெறும் கடவுளை வணங்குகிற எளிய நிலையில் நாம் வீணடிக்கலாமா? நமக்கு அதற்கு உரிமை உண்டா அப்பா?''
''வளர்ந்த பின் பெற்ற தந்தையைப் பற்றி மறந்து விடுவது போல நீ பேசுகிறாய்'' என்று சிரித்தார் குளத்து.
ஆனால் குழந்தையின் மழலைத் தத்துவங்கள் அவரை பிரமிப்பில் ஆழ்த்தின. என்னை மறந்து தன் போக்கில் சிறகு விரிக்க அவனுக்குச் சுதந்திரம் தந்தவனே நான்தான். கடவுளும் அத்தகைய ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும். எதோ ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இல்லாமல் எதற்கு நம்மை இந்தப் பூமியில் பிறப்பித்திருக்கக் கூடும்.
அடேடே இந்தச் சிந்தனையிலேயே முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் எத்தனை முரண், சிக்கல்?
''மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார். அவனது பயம் சார்ந்த பிரதிபிம்பம். பிரமை. பீதியின் நிழல். அவனது மரணத்தின் நிழல்-பிரம்மாண்டம்! அதன் பெயர் கடவுள்''
''மரணம், காலம், கணக்குகள் வாழ்க்கையில் எத்தனை நூல்சிக்கல்கள்!'' என்று அவர் பேசுவதை அவன் கைமறித்துத் தடுத்தான். ''மொழியலங்காரச் சிந்தனைகள் வேண்டாம் அப்பா, தயவுசெய்து'' என்றான் உடனடியாக.
நுணுக்கமான சூட்டிகையான பிள்ளைதான்!
அவர் கைப்பிடிக்குள் அவன் இல்லை என விரைவில் அவன் நிரூபித்தான். மண் எல்லை கடந்தான் அவன், அவருக்கு அது வருத்தமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. கடமைசெய்! பலனை எதிர்பாராதே! கீதை!
தனிப்பெரும் தத்துவம் அல்ல அது. இயற்கையின் வாழ்வம்சமே. மிருகங்கள் அப்படியே வாழ்கின்றன அல்லவா? பெத்ததோடு அவை குஞ்சுகளின் இறக்கை முளைக்கும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்து விடுகின்றன. இது என் குஞ்சு என வளர்த்த - பெற்ற தாய் பிறிது கண்டு கொள்ளுதல் இயலுமோ?
கடவுள் ஊனிலும் உயிரிலும் இருக்கிறான்.
ஆனால் ஊனில் இல்லை. உயிரில் இல்லை, இரண்டின் கலவையாக இரண்டின் பேரிணைப்பாக நடுவே படைப்பிலக்கிய இரகசியமாய் அவன், உள்க்குறிக்கோள், அம்பின் திசையாய் வேகமாய் அவன், அருவ உருவம் அவன்.
கடவுளுக்கு உருவம் உண்டா?
''ஏன் இல்லை?'' என்றான் நீலகண்டன். ''புராணங்கள் இதிகாசங்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனவே! படைப்பின் உச்சகட்டமான மனிதன்... அவன்தான் கடவுள். அதுவே அவன் உருவம். இறுதி அவதாரம் என விளங்கவில்லையா அப்பா''
அவர் அவனைப் பார்த்தார்,
''நீங்கள் தினந்தோறும் கற்பூரம் காட்டும் மூல விக்கிரகர், அதில் மனித முக வடிவம் எதற்கு அப்பா?'' என்கிறான் அவன் தொடர்ந்து.
முரண்களின் சங்கமத்தில் கடவுள் ஒளிந்திருக்கிறார். பிடி கொடுக்காமல். ஆனால் உணர வைக்கிறார்.
எளிய பரபரப்பில்லாத மனிதன் நான். எனது உயிரை சர்வவியாபியான கடவுளின் துகளாக நான் காண்கிறேன்.
நீலகண்டன் நியதிகளில் சவாரி செய்தபடி தன்னை பிரபஞ்சத்தின் சாரதி என உணர்கிறான்.
இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார்.
முரண்களின் சங்கமமாக!
நீலகண்டன் வந்த தினங்களில் மீண்டும் விவாதங்கள் இவ்விதமே வளைய வந்தன. அவற்றின் உச்சபட்ச உக்கிரத்துடன்.
நாம் சந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் சட்டென்று தத்துவங்கள் சந்தித்து விடுகின்றன - ஆச்சர்யம்.
''கோவில் எப்படி இருக்குப்பா'' என்கிறான் நீலகண்டன்.
''அப்டீன்னா?''
''நீங்க இன்னமும் மாறவே இல்லையே''
''நீயும்'' என்று சிரித்தார் குளத்து.
''சாயந்தரம் கோவிலுக்கு வாடா! எல்லாருமா வாங்கோ'' என்றார் மருமகளைப் பார்த்து.
அவன் வந்ததுகூட இல்லை. கூட அவள் அவரைப்பார்க்க வந்தது ஆச்சரியம். ஒரே நாளில் அவள் திரும்பிப் போய்விடுவாள். அவள்வேலை அப்படி,. இம்முறை அவளும் கூட ரெண்டுநாள் தங்கிப் போவதாகச் சொன்னாள். நியதிகளில் அலுத்துப் போய் அவர்கள் வந்திருந்தார்கள் என யூகித்தார்.
அதைத்தான் அவன் கேட்கிறான் போலும் - அப்பா உங்களுக்கு உங்கள் காலாந்தர நியதிகள் இன்னும் அலுக்கவில்லையா?
சுயம் சார்ந்த பிரமைகள் நியதிகளை அலுப்பாய் உணர வைக்கின்றன. சகலத்திலும் தன்னை உணர்ந்ததற்குப் பின் நியதிகளைப் பற்றிய கணிப்புகள் பின்னடைவு கொண்டு நித்தமும் பிரபஞ்ச வாசனை நுகர்ச்சி ஒரு மானுடனுக்கு அலுக்குமோ?
அவர் புன்னகை செய்து கொள்கிறார் -
அன்று மாலை நீலகண்டன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தான்.
கர்ப்பக்கிரகத்துள் நின்று கற்பூரங் காட்டுகிறார் குருக்கள். நீலகண்டன் கைகட்டி நிற்கிறான் உற்றுக் கடவுளை அவதானித்தபடி! என்ன ஒரு சவால் அந்த நிற்றலில். கடவுள் சந்நிதியில் அவர்முன், இது சாத்தியமா? என்ன அழகான சக்தியாளுமை கொண்ட விக்கிரகம் இது என்கிறார்கள். இவனுக்கான அனுபவம் என எதுவும் இராதா?
கற்பூரத்தட்டை நீலகண்டன் முன் நீட்டிக் காட்டினார் குருக்கள். குனிந்து நெற்றியில் கற்பூரத்தட்டின் திருநீற்றை எடுத்து அவன் பூசிக் கொண்ட கணம் அவர் முதுகுசிலிர்ப்புடன் - யாரோ பார்க்கிற பிரமையில், திரும்பிப் பார்த்தார், சந்நிதியில் உள்ளே மனிதன். ம் மனிதன். கடவுள் விக்கிரகமல்ல. அவன்! மனிதன். நீலகண்டனைப் பார்த்து அந்த கற்பூர ஆராதனைக்குக் கும்பிட்டாற்போல இருந்தது.

ஐயே! பொட்டப்புள்ள!
ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சி ''ஐயே! பொட்டப்புள்ளடா மருது'' சொல்லிவிட்டு சென்றது தெரியும். சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். ''அதெல்லாம் பாவம்டா, அவ இவ பேச்செல்லாம் கேட்டுட்டு அந்தச் சிசுவக் கொன்னுடாதடா பாவி! சொல்றதக் கேளு'' அவள் முடிப்பதற்குள் அடி, இடி போல விழுந்தது. ''ஏய்! கெழவி வாய மூடு, இத வளத்து சீர், கல்யாணம் காட்சி பண்றதுக்கு எங்கப்பன் எனக்கு சேத்து வச்சிட்டு செத்தான் பாரு'' இன்னும் எதேதோ திட்டிக் கொண்டிருந்தான் அவன்.
நெஞ்சுக்குள் பயம் படபடவெனப் படர்ந்தாலும் ராசாத்தி அமைதியாகப் படுத்திருந்தாள். மருது அருகில் வந்து குழந்தையைக் கையில் எடுத்த போது '' பொட்டப்புள்ள, அதுக்குப் பின்னால செலவு செய்யனுமுன்னு இப்பவே கொன்னுடனுங்கிற... செய்யி... ஆனா அடுத்து எனக்கு ஆம்பிள்ளைப் புள்ள பொறந்தா, அத நான் கொன்னுபுடுவேன்.....'' மருது அதிர்ந்தான். கோபம் தலைக்கேற.. ''கழுத! என்னா தெனாவட்டு உனக்கு...'' விட்ட அறையில் தலை சுற்றியது ராசாத்திக்கு.
''ஐயோ! இதெல்லாம் கேட்கத்தான் இன்னும் இருக்கேனா? புள்ள பெத்தவடா, அடிக்காதடா பாவி'' அரற்றினாள் சிவதாயி.
ராசாத்தி வலுவற்ற குரலில், ''ஆமா! உனக்குப் பொறக்கற ஆம்பளப் புள்ள என்ன பெரிய உத்தமனாவா இருக்கப் போவுது? அது வளந்தோன நீ உன் ஆத்தாள அடிக்கிற மாதிரி என்னையும் இழுத்துப் போட்டு அடிக்கும். என்னைய மாதிரி எவளாவது அதுக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பா, அதெல்லாம் வேணாம், பிள்ளையக் கருவுல வளக்கறதுதான்யா கஷ்டம். அதக் கொல்ல யாரு உதவியும் எனக்குத் தேவயில்ல. போ! உன் குலத்த வேர் அறுக்கறதுல நீயா நானான்னு பாத்துருவோம்'' அவள் குரலில் அழுத்தம், தெளிவு.
அவள் பேசப் பேச.... சிவதாயி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். இன்னும் ராசாத்திக்கு அடி உதை விழுந்தபடிதான் இருந்தது. ஆனால் மருது முகத்தில் இதுவரை அவள் கண்டிராத சிந்தனை ரேகைகள்! கண்கள் மயங்கச் சரிந்த ராசாத்திக்கு தன் மகளை காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சி

Subscribe to:
Posts (Atom)